It கலைமகன் கவிதைகள்: நிறங்களுடன் கூடிய நல்லதொரு குடும்பம்....

சனி, 23 மே, 2020

நிறங்களுடன் கூடிய நல்லதொரு குடும்பம்....



நீரில் சாகப்போனவளைத் தாங்கப் போனவன் ஒரு முஸ்லிம்
சாகப்போனவளோ தமிழச்சி
சாகப் போனவளைக் காத்தவன் சிங்களவன்
இறந்தவனின் தந்தையோ முஸ்லிம்
இறந்தவனின் தாய் பெளத்தம்
இறந்தவனின் தாரமவள் கிறித்தவம்
பிள்ளைகள் இருவரும் பெளத்தம்...

இறந்தவன் தாங்கிய பெயர் முஸ்லிம்
பெட்டியின் நிறம் கபிலம்
கட்டிய நூல்கள் வெள்ளை
கரங்களில் கட்டிய நூல்களும் வெள்ளை
சவக்குளி மண் களிமண்
ஆனால்,
சவத்தைப் பார்க்க வந்தோர்
பன்னிறத்தோர்...
இறைவா இறுதிநிகழ்வை நினைத்து
ஏதோ எனக்குள் 'க்' ஒன்று......
அதனாற்றான்
வெறும் எழுத்துகளை மட்டுமே
உடைத்து எழுதினேன்...
வார்த்தைகள் இன்றி...
தொண்டைக்குழிக்குள் உமிழ்நீர்
இறங்க மறுக்கிறது....
என்னைத் தப்பாக எண்ணாதீர்கள்...
என் நிறம் கறுப்பு....
எல்லோர் இதயங்களும்
எல்லோர் இரத்தமுந்தான் சிவப்பு?
அன்று அவனை ஆராதித்தேன்...
இன்று ஏனோ உள்மனம்
கேள்விக்குறியாய்...
கனத்தோடு....
பெரும் ரணத்தோடு....!
ஒன்றுமட்டும் உண்மை...
ஆத்திகன் நாத்திகன்
எல்லோரையும் சிருட்டித்தவன் ஏகனே!
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்2020.05.23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக