It கலைமகன் கவிதைகள்: அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

சீதனம் பற்றி உள்மனதில்
சீர்தூக்கி சோர்ந்துபோகும் – நானா
செத்த பொணம் மாப்பிளைங்க
சத்தியமாய் வேணாமுங்க – அழமாட்டேன்!

மறைநபியின் வாக்கையெல்லாம்
மண்ணில் உதறிவிடும் மனுசனுங்க
நறைவிழுந்து கூன் வந்திடினும் – வேணாமுங்க
நானா கவலைவிடுங்க – அழமாட்டேன்...

சோதரிகள் மூவரும் நானும்
சோதனைகள் பொறுத்திடுவோம் – நானா
வேசாதாரிகளை இனங்கண்டோம்
வேண்டாம் வந்து போகும் மாப்பிளைங்க....

பணமென்றால் வாய்திறக்கும் பிணங்கள்
பசுத்தோல் போர்த்திய புலிகள் – நானா

கணமும் எனக்குக் கவலையில்ல
கருத்தினி லிருந்தே விலக்கிடுங்கள்....

அழகினி லறிவினி லேன்குறைச்சல்?
அகதவன் பணிகள் செய்வதிலுமேன் குறைச்சல்?
நிலையிலா உலகில் மஹர் தந்தெனை
நிலைகொளும் கணவன் வருவான் – எப்போதோ!

பணத்தை விரும்பும் வீணர்கள்
பாதாளத்தில் வீழ்வது நிஜமே!
குணமே இல்லா ஈனர்கள்
குன்றுவர் தம் செயலாளே!

அழவே மாட்டேன் நானா நான்
அறிவே இல்லா மடையர்கள்
நிழலே பூமி பொங்கக் காண்!
நிஜமாய் வீழ்வர் என்றுந்தான்!

பாசமிகு என் நானா – நான்
பார்த்தேன் உங்கள் பாசந்தான்
காசாலே சாவுண்டாம் எண்ணுங்கள்
காத்திருப்பேன் நபிவழிவரும் கணவனுக்கு!
தேசமெங்கும் தேடினும்
நாசம் செய்தார் தான் கோடி
கவலை விடுங்கள் எனக்காக
அழவே மாட்டேன் நானா நான்!

நன்றி:
நிதாஉல் இஸ்லாம்
இலண்டன் தமிழ் வானொலி

Face Book முகநூல் பின்னூட்டங்கள்:

1. Mohamed Nawaz 
thirunthuma intha samuuham?

2. Ajmeer Khan
சீர் கேட்கும் சீர் கெட்டவர்கள் சீராகி வருட்டும் ஊர் போற்ற வாழ்கிறேன்...

3. Loganadan PS
மிக அற்புதமான வரிகள். அருமையான நடை. வாழ்த்துக்கள்

4. Kantalai Yoosuf 
அருமையான வரிகள். நன்றி அஜிமீர்....

5. Dawood Ahamed
காத்திருப்பேன் நபிவழிவரும் கணவனுக்கு!

6. மௌனஞானி பார்த்திபன்
//சோதரிகள் மூவரும் நானும்
சோதனைகள் பொறுத்திடுவோம் – நானா
வேசாதாரிகளை இனங்கண்டோம்
வேண்டாம் வந்து போகும் மாப்பிளைங்க....//

7. Movlovi-Ameer Husain 

உன் நாநா சும்மாவடி வந்தான்?
***************************
(மருதமுனை அமீர்) மவ்லவி-அமீர் ஹுஸைன்
--------------------------------------------------------------------------

பணமெங்கேயடி நான் கேட்டேன்?
உன்பெண்குலம் உனைமணக்க 
எனைதடுக்கும் என்தாயும்,
சோதரிமாருமடி!

அழமாட்டேன் நாநா
அழமாட்டேன் என்று
அடம்பிடிக்கிறாய்
சும்மா மாப்பிள்ளையெடுக்கத்தாண்டி!

உன் நாநா 
சும்மாவடி வந்தான்
என் சாச்சியமுடிக்க?
அவன் சொத்துப்பங்க கொடுக்காம
வெறுங்கையோடு 
அனாதையாத்தானே அனுப்பினயள்
உம்மா மகள்மாரெல்லாம் சேர்ந்து?

உள்ளதை உள்ளபடி
பங்கு பிரிச்சிருந்தா
அவனும் ஒரு மூலையில
குந்தியிருந்து
காலத்த ஓட்டுவான்தானே?
நானும் ஒன்ன என் வீட்டுல வெச்சுக்க
என்னும்மா சோதரிகளும்
விட்டிருப்பாங்கதானே?

நீ என்ன நபிவழி பேசுறாய்?
வாயிருந்தா வாறதெல்லாம்
சுயநலஹதீதுதானோ?
இது ஹதீது இல்ல;
அதுயிது!

அது இது பேசிப்புலம்பி
இனியும் கிழவியாகாம
நபிவழி ஹதீதுப்படி
நாநாவுக்கும் எதையாவது
உள்ளதுல பங்குவெச்சிக் குடுங்கோ
அவனுக்கும் இரண்டு புள்ளயாச்சி;
அப்ப ஒன்னையும் கட்டிக்க 
உன் மாமியாரு என் தாயாரு
ஒத்துக்கும்!

October 17 2013

8. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
// "அழவே மாட்டேன் நானா நான்
அறிவே இல்லா மடையர்கள்
நிழலே பூமி பொங்கக் காண்!
நிஜமாய் வீழ்வர் என்றுந்தான்!"//
****** கவிஞரின் கோபம நியாயமானதுதான்!! ஆனால் இதற்குத் தீர்வு சாத்தியமானதல்ல!! இது சமூகத்தில் புரையோடிப்போன ஒரு புற்றுநோய்!!

9. மக்கள் நண்பன் 
//அழவே மாட்டேன் நானா நான்
அறிவே இல்லா மடையர்கள்
நிழலே பூமி பொங்கக் காண்!
நிஜமாய் வீழ்வர் என்றுந்தான்!//

super sir...super.


Kalaimahan Fairoos திரு. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா, இன்று புற்றுநோய்க்கும் கைம்மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். மரவள்ளிக் கிழங்கு மருந்தென வைத்தியர்கள் அறியத்தந்திருக்கிறார்கள். இங்கு நமது கவிமரவள்ளிக் கிழங்குகளால் கவிதைகள் படைத்து புரையோடியதை அழித்திட தினந்தோறும் எழுதிக் குவிப்போம்.. ஒரு கல்லேனும் படாமலா இருக்கும். (பலஸ்தீனியச் சிறுவனின் கல் ஒரு அமெரிக்கனைத் தாக்கியதாய்...)

10. Movlovi-Ameer Husain 
படுது,படுது. கவியின் கற்கள் கணீர் கணீர் என்று தலையிலேயே படுது!

11. Rahila Halam
Maashaallah........... arumaiyana kavithai............. arivil pada vaikum kavidhai...........

கேட்டுக்காம போங்க மச்சான்!
 ==============================
சும்மா அலட்டாதுங்க ஏண்ட மச்சான்
ஆம்புளத்தனம் இருந்தாக்க
நீங்க புத்தி சொல்லனுமா இல்லையா?
சும்மா தகராறு ஏன் மச்சான்
வந்த வழிய பாத்து போங்க....!

சும்மாதான் நான் மாப்பிள்ள எடுப்பன்
கேக்குறத்துக்கு என்ன உரிம ஒங்களுக்கு
சீதன மாப்பிள்ள வேண்டாமேதான்
வந்த வழிய பாத்து போங்க....
உங்களத்தான் நான் கேட்டேனா?

சீதனத்துக்கா அலஞ்சதால
உங்களுக்கும் கிழப்பருவம் தட்டிப் போச்சு
நான் இன்னும் கிழவியல்ல...
நம்பிக்கை முத்துக்கள் உண்டெனக்கு மச்சான்!

உங்க சாச்சி மார்க்கம் தெரிஞ்சவங்க
உங்களப்போல பொறம்போக்கு இல்லங்க....
தெரிஞ்சுதான் என் நாநாவ எடுத்தாங்க...
நானா சீதனம் கேட்காதால....
அறிவிருக்கு அருமறை ஞானமிருக்கு
அலசியறிய ஆற்றலிருக்கு அவருக்கு
சும்மாதான் வந்தாரு
சாச்சி நல்லாத்தான் இருக்காவே
அல்லாஹ் கிருபயால....

எனக்கே பிரச்சினையில்லாம நானிருக்கன்
பங்கு பிரிக்க இப்பவே சொல்லுறீங்க....
நானாவே எல்லாத்தையும் எடுத்துக்கட்டும்
எனக்கொன்றும் பிரச்சின இல்ல மச்சான்!

அதத்தாங்கோ இதத்தாங்கோ என்று
நாங்களா கேட்டோம் எங்கட மச்சான்..?
மஹர் தந்தே உங்கட சாச்சிய கைபிடிச்ச
எங்கட நாநாவுக்கு....
அத்த்தாரன் இதத்தாரன் எண்டு
உங்கட பெரிசுகள்தானே சொன்ன மச்சான்...!
மௌலவி என் நாநாவுக்கு பள்ளியில
அமல் செய்து சொற்ப பணத்தில 
இருக்க விடாம வீட்டோடு நில்லுங்க
அதச் செய்துதாரன் இதச் செய்துதாரன்
எண்டு சொன்னத கொஞ்சம்
மனசில போட்டு பாருங்க மச்சான்....!

சும்மா வாய்க்கு வந்தத ஒலறாம
ஒல்லுப்பம் அவர் நிலமய பாருங்க....
நல்லாத்தான் இப்பவும் அவர் இருக்கார்
பார்த்திருக்க உங்களுக்கு பொறாமையோ...?

என்ன மணம் பேசி நீங்க
என்னிடம் கேட்டிட பல வரவேண்டாம்...
கிழிப்பதும் தைப்பதும் உங்க வேல
வேலய பார்த்து போங்க மச்சான்
அல்லாஹ் இருக்கான் எனக்கு...
நல்ல வரன் வந்துவிடும்
நீங்க நாளை பாருங்க...!

நான் நபிவழி பேசுறேன்தான்
எங்கும்மா அப்படித்தான் வளத்தாங்க...
சுயநல ஹதீஸொன்றும் 
தெரியாது எனக்கு...
லஈபும் தெரியும் ஸஹீஹும் 
நல்லாவே தெரியும்
எங்கட மச்சான்....
சும்மா மோல்ல வீ பிடுங்காம
உங்கட வேலய பாத்துப் போங்க...
நீங்க வேண்டாம் மாப்பிளையாய்
அவன் தருகிற நேரம் தருவான்
ஸாலிஹான பதியெனக்கு...!

நரை திரை மூப்பு வந்திடினும்
என் கொள்கையில மாறமாட்டன்
நானாவ பத்தி அலட்டாம
உங்கட வேலய நீங்க பார்த்து
சீதனம் கொடுக்கும்
வெட்கம் கெட்ட பெற்றோரிடம்
மணவாட்டி யொருத்திய பெறவே
நடைய கட்டுங்க எங்கட மச்சான்...!

உங்கள முடிச்சுத்தான் உங்கும்மா
எனக்கு மாமியல்லவே மச்சான்
என் நாநா மாமி எனக்கும் மாமிதானே
மொதல்ல அத கொஞ்சம் யோசிங்க
எங்கட மச்சான்.....
நீங்க வேண்டாம்
பங்கும் பாகப் பிரிவினையும்
இப்பவே கேட்பதால....
அஸ்ஸலாமு அலைக்கும்
போய் வாங்க.. வேறுபேச்சு
என்னிடம் வேண்டாம்...!

-தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்
2013 October 18 at 5:14pm 

12. Movlovi-Ameer Husain 

இடுவம்புவேணாம் என் மச்சினியே
*******************************
(மருதமுனை அமீர்) மவ்லவி-அமீர் ஹுஸைன்
--------------------------------------------------------------------------

எய்தவளிருக்க அம்பை நோவதேன்
என்மச்சினியே?
இடுவம்பிறுமாப்பு 
இவ்வம்பைவிடக்கூரியது
மூக்கில் கோபம் கொண்ட 
மூக்குத்தி மச்சினியே!

புத்திசொல்லியுனக்கு
புண்ணியமாகுமேயுன்னை
சுத்திச்சுத்தி நானிருந்து
திரிகையிலேயென் மச்சினியே!

நாப்பதை பிந்தி
கருவிறுதியாக்கி
சந்ததியற்றுத்தவிப்பதை
நீ தவிர்த்திடு
பிடிவாதத்தைப்புதைத்திடுவென் மச்சினியே!

கிழப்பருவமாகி
முதுமை மூடராகி
வந்தவழிபார்க்கையிலே
நீதிரும்பி
இன்னும்பலரும்
உன்வழியில்
ஓய்ந்திருப்பர்
ஒன்றும்காணாமல்
சும்மாமாப்புள்ளைக்காய்
காத்திருந்துவென் மச்சினியே!

நீ ஓதுமந்த ஹிக்மத்துக்குள்ளிருக்கும்
மஹருபோலவுன் சோதரனுக்கும்
இருபங்கிருப்பதை
பார்க்கணுமேயென் மச்சினியே!

முழுப்பங்கையுமவர்
எடுக்கட்டுமென்று
வெறுப்பாய்க்கூறி
சீறிப்பய்ந்தால்
சீதனக்கொடுமை யொழிந்தா
போகுமென் மச்சினியே?

அவரிது தருவார்
இவரிது தருவாரென்பதெல்லாம்
வார்த்தைகளல்லாமல்
வாக்குகளல்லவென்பதால்
வான்மறைவழியொழுகி
உன்னொரு பங்கும்
என்னிரு பங்கும்
நீதமாய்ப்பிரித்து
பெற்றோர் கொடுக்கும்
சொத்தில் நாம் சுகமாய்
வாழுவோமேயென் மச்சினியே!

இவ்வழியறியாமல்
வாழாவெட்டியாக
நீவாழ நான் பொறுப்பேனோ
இல்லை உன் நாநாதான்
விடுவாரோவென் மச்சினியே!

இடுவம்பும்
இறுமாப்பும்
இனியும் வேண்டாம்
இனியவெம் பருவத்தை
இனிப்பூட்ட
இஸ்லாத்தில்
இருக்குதுவே
இங்கிதமும்
இல்லறமும்
இலகுவாய்நாம் பெற்றிடவே
என் மச்சினியே!!!


(2002/09/22 காலியில் இடம்பெற்ற விழாவொன்றில் கவிதை வாசிக்கிறேன்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக