It கலைமகன் கவிதைகள்: தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!

ஞாயிறு, 9 மார்ச், 2014

தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!


அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!

கல்விப் பால்கற்று கடைத்தேறு என்றேன்
கனிகை நீ எனக்குத்தானே யென்றேன்…
பல்லாறாய் ஆற்றுப்படுத்தினேன் நான்
பாதை யிடையில் கழற்றினாளே பின்!

அழகிலை பணமு மவ்வாறிலை அறிந்தாள்
அழகான வாலிபனை அருகணைத்தாள் பொன்
நிழலாக நான் தொடர்ந்து கரைத்தவை வீண்
நெஞ்சத்து கறைசேர்த்து சேர்ந்தாள் வடிவின்பால்!

விதியின் வாட்டத்தில் வீதியில் நடக்குங்கால்
விளையாடுவ ரிருவரும் எனை நோக்கி வீண்
சுதிகொண்டு அழுகை தனலாக வடியும் என்னுள்
செத்துச் செத்துப்பிழைத்தேன் நானே தான்!

உயிருமுடலு மொருவர்க்கே என்றாள் - பின்
உயிரையே கட்டையாக்கி பித்தானாக்கினாள் பார்
செயவிலை காதல் என்றவள்தாய் - எனக்கு
செய்தாளே கண்கள் அழுகிட பலவாய்!

உருண்டன காலங்கள் உயிரின்றிப் பிணமாய்
உருளவிலை என்தமிழ்தான் தந்தன கவிகள்
பெருத்தன கவிமேலும் தமிழுந்தான் வளர்ந்தது
பெருகினர் மாணாக்கர் என்தமிழின் சுவையில்…

வேண்டாமென்று வைது தள்ளினாளின் தங்கை
வேண்டிவந்தாள் என்தமிழ்காண கடைத்தேற
ஆண்டவன் செயல் நாடகமாடின எம்மில்
அடியேன் வெறுத்திட ஆண்டவன் செயல்வேறாய்…

ஆண்டுகள் பல கூடியவன் அடியேனானாலும்
அணைத்தன கண்கள் பணித்தன னவள்கண்கள்
கூண்டில் முடங்கிய என்னுள் பிறந்தது தெளிவு
கூடிக்கூலாவி மனமகிழ்ந்திருந்தேனே நான்….!

மனமகிழ் வெனக்கு மனமகழ்வோ - அவளின்றி
மணம் செய்தும் அவளாய் இவளே யிருந்தாள்கேள்..
மனதுக்கு ளாயிரம் சுமையுடன் சுமந்தே னிவளை
மாணிக்கம் பின்னவள்தான் என்பதும் தெளிந்தேன்…

அழகோ கைப்பணமோ வேண்டாள் இவள்…
அருகிருப்பாள் அணைந்திருப்பாள் அடியேனில்
நிழலாக பின்தொடர்வாள் என்பேன் நான்…
நிச்சயமாய் அவள் பொன்மான்தான் இறையால்!

உருண்டன காலங்கள் மேலும் பலவாய்
முன்னவள் பதியிழந்தாள் மடைமை யழியாள்
மருண்டாள் மானாய் தடம்மாறினாள் முன்னதாய்
மீண்டும் பற்றினள் மாயையொன்றாள் ஒருவன்…!

என்குள் காதல்செய்தே பழகினள் வேறொவன்க்கு
என்வலி பிரித்த தவனது தாயின் நச்சரிப்பால்
இன்று அவன்பதிபிள்ளை பெற்றவள் அறியாது
இடையிணைப்பு இருவர்க்கும் இறையே கதி…!

மறை யறிந்த நல்லவரும் மயங்குவரே
மகளிரின் காதல்மொழிப் பேச்சில் அழிவரே
இறைமறை அவர்க்காய் மாறும்  - தீயன
இங்கிதமாய் செய்வர் அவர்க்குள் மறையன்றோ…

ஊர்க்கும் உலகிற்கும் நல்மகளிராம்  - இறை
உணர்ந்த நல்லார் அவராம் சொல்வர் பலரும்
நார்நாராய் பிறரிதயம் கிழித்து ஒன்றிணைந்து
நாயன்விதியிது என்பர் நாண மின்றித்தானே!

பதியொடு இன்றும் நினைத்தனன் நானே
பதிக்கும் பகர்ந்தனன் உண்மை பலவே
கதியது வென்பா ளவளும் - பேறே
காலம் சென்றும் கடைத்தேறினன் யானே!

வேண்டாம் வேண்டாம் இங்ஙனம் மகளிர்
வெறுப்பே இறையே இச்செயல்புரி மகளிர்
அன்பினை கண்டிட வேண்டும் மருந்திங்கு
ஆறுதல் தந்திட வேண்டும் பலமருந்திங்கு!

பச்சோந்தியாய் மாறும் பெண்டிர் குணங்கள்
பாடுபொருளே - நலமில் மாயைக் குணமே
நச்சென்று பிடிப்பர் ஆண்கள் பலரை
நலமின்றி வீழ்வர் எனைப் போல்வரே!

காலந்தாழ்த்தி தந்தா னிறைவன் தெளிவு
கன்னிகை யவளின் உண்மைப் பொலிவு
கோலமே யெல்லாம் என்பது தெளிந்தனன்
கோலப் பைத்தியம் அவளினின் நீக்கினேன்!

மறையே இறையே மாண்புறும் என்னவள்
மேதினியில் நற்குணத்தவளாய் என்றும்
நிறைந்தே நின்றிட நின்றன் நோக்கினை
நலவாய் வேண்டினன் நாணுதலுடனே நான்!

உள்ளொன்று வைத்து புறமொன்று அறியேன்
உயிர்த்தேன் பலவாறு முன்னவளாள் யான்தான்
கள்ளமிலாமல் என்றும் என்னவள்க்குள் வாழ
கடைத்தேற வழிகாட்டு நீயே அறிவாய்…!

உண்மை தெளிந்திட செய்திட்ட உனக்கு
உதவியதற்காய் தொழுதிடுவ னுனை நான்
எண்ணுவன் உனையே - ஏந்திழையுடனே
ஏற்றம் உண்டு தெளிந்தேன் நானே!

-கலைமகன் பைரூஸ்
-09.03.2014
பிறப்பு 1990 - இறப்பு 2014.03.09
(யாரையும் சுட்டுவதல்ல இக்கவிதை என்க!)




























http://eluthu.com/kavithai/183289.html

)

)

)

)

)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக