It கலைமகன் கவிதைகள்: கைம்மாறு இதுவோ என்பாரோ?

வெள்ளி, 28 மார்ச், 2014

கைம்மாறு இதுவோ என்பாரோ?

வரும்வரை வருவார்
வந்தபின் யார்என்பார்
நிலத்தில் கால்பதித்தபின்
நம்மவரை
விடம்கொண்ட நாகத்து
நிலையிலிருந்து
நோக்குவார்.. அப்போ
நோக்கங்கெட்டவர்
நாமே ஆவோம்....


புள்ளடிகள் இடுமாறு
பல்லிளிப்பார்
காகிதங்கள் பலவும் தருவார்
கூடவே அவர்வீட்டு
என்றும் நாம் காணா
உணவுப் பொட்டலமும்
கைக்காகும்....

30 ஆம் திகதி ஏப்பிரலில்
அவர் வெற்றி காணாராயின்
நாம் வாக்களித்தும்
அவர் வாக்களிக்காதார்
நாம் என்பார்....
கைம்மாறு இதுவோ என
நாம் கேட்க வேண்டியதை
அவர் கேட்பார்....

நாம் புள்ளடியே என்றும்
நாடியே அளித்தோம்...
அவரில் நாட்டமில்லை
 என்பதை வெட்டிக் காட்டினோம்...

பலதும் தருவதாய்ச் சொன்னவர்
ஏதுதான் தந்தவராம்....
பச்சை நீலத்தை வெட்டியதும்
நீலம் பச்சையில் எச்சில் துப்பியதும்
சிவப்பு சீச்சி என்றதும்
இன்ன பிற மரங்கள்
ஆடியசைந்ததும் தான் மிகுதி....

கொடுங்கள் எல்லீரும்
கொடுமை செய்யான் இவனாயின்
கொடுங்கள்... புலரிப்பொழுதிலேயே..

என்றும்
வாக்காளர் நாம்
வேட்பாளர்களின்
பகடைக்காய்கள்தான்....?

இல்லை

இவ்விழிநிலை மாற்றிடவே
ஆய்ந்து அளித்திடுமின்
பத்தொடு ஒன்றுக்கும்
அளித்துத்தான் பார்ப்போம்...
பச்சையாய் எம்மைப் பார்ப்பரா?
பாசந்தான் காட்டுவரா
எனப் பார்ப்போம்....

பசுத்தோல் போர்த்தி
வேட்பாளப் புலிகள்
வேட்டையாடுவது
பரம இரகசியமன்று....

பார் கண்ட உண்மை...

மாற்றங்கள் காணுமா
வி்டியல்தான் ஒளிதருமா?
நாளை மறுநாள்
எமக்குள் விடியுமா?
பார்ப்போம் இதிலும்...!

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக