It கலைமகன் கவிதைகள்: நவீன ஜடாயுவும் விபீடணனும்!

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நவீன ஜடாயுவும் விபீடணனும்!



அதிகாரவர்க்கத்தின் முதுகந்தண்டில்
அமர்ந்து மிக அழகாக
அடாவடித்தனம் செய்கின்றன
இன்றைய ஜடாயுக்கள்!


இன்றைய இராவணன்
கண்களைக் கட்டிக் கொண்டிருக்க
விபீடணன்
ஜடாயுக்கள் காவிதரித்து
இனச்சுத்திகரிப்புச் செய்ய
திறைமறைவில்
திறந்த உபதேசம் செய்கின்றான்!

விபீடணனின் கைப்பிள்ளையாம்
காவிஜடாயுக்களின்
இறக்கைகள்
இரவணனால் வெட்டப்படுமா?

வானரங்களாக நின்று
வனத்திற்கு உரிமை கோருகின்றன
வெளிவேஷம் காட்டும்
வேஷாதாரிகளான ஜடாயுக்கள்!

குடித்துக் கும்மாளமிட்டு
இனத்துவேஷம் செய்தற்கு
ஆயுதங்கள் கோருகின்றன
இராவணனிடம்...

மௌனிக்கின்றான் இராவணன்
இங்கு வாலியும் வாழ வேண்டாமோ?
உள்ளத்தில் மெல்லச் சிரிக்கிறான்
கறுப்புக் கண்ணாடியணிந்து....

அழித்துவா
இரத்தம் ஓட்டிவா பார்த்திருக்கிறேன்..
என் கழுத்தில் உள்ள வஸ்திரம்
இரத்தக்கரையை காணமற் செய்யும்...

இந்த ஜடாயு அறியாத
உண்மை இங்குண்டு...
கழுத்திலுள்ள உனது
இறக்கைகள் வெட்டப்படாமலே
நல்லோரின் ஒரு துஆக்கல்
அழிக்கும் மிக அருகில்....

அங்கு நைல்நதி...
இங்கு மகாவலிநதி...

இன்ஷா அல்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக