It கலைமகன் கவிதைகள்: திரு(க்)கை

புதன், 16 மே, 2018

திரு(க்)கை


திருமதியவள் திருகையிலே கைபிடித்து
திருப்பித் திருப்பி மாவரைத்து வரும்
விருந்தினரை அகம்குளிர்ந்திடச் செய்திடவே
வடிவாகச் செய்கின்றாள் திருக்கைவந்த
வாணலியில் வெந்த உண்டியைத்தான்
திருமதியின் திருக்கைகள் திருகையிலே
தினந்தோறும் விதவிதமாய் பல்லுண்டி
திருவாளர் மனம்மகிழச் செய்திடவே
திருகையின் பேருதவி கிடைத்திடுமே
திருகைபோலின்று ஏதுமிலை இலகுவாய்த்

தருமின்று நோய்கள்தான் இலகுவினாலே!
அன்றுபோலின்று உள்ளாளோ மங்கையவள்
அழுதழுது வேண்டுகிறாள் மின்னுபகரணம்
குண்டாக நோயோடு நடக்கத்தானியலாமல்
குந்தியே நிற்கின்றாள் திரு(க்கையிலாதாலே!

-     கலைமகன் பைரூஸ்
இலங்கை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக