It கலைமகன் கவிதைகள்: தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!

செவ்வாய், 29 மே, 2018

தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!


குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை
*********************************************
தலைப்பு : அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக (முதல் வரி)
**************************************************
எண்ணித் தமிழா எங்கும் எழுக! (இறுதி வரி)
***************************
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
*****************************************

அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக
அமுதமாய் ஒளிரும் நற்றமிழைப் பாட
அங்கையின் ஏந்தி அகிலத்தில் சுடர்விட
அன்புத் தமிழா சட்டெனவெழு தரணியிலே...


ஆண்ட தமிழ் ஆழுந்தமிழ் செந்தமிழே
அகிலத்தில் உயர்செம்மொழி நம் தமிழே
ஆழ்வார்கள் ஏந்திய தமிழ் கனிகைத்தமிழே
ஆண்டிட பாரில் வீழ்ந்திடாதது நற்றமிழே!

இத்தரை மொழிகளில் தண்டமிழே தமிழா
இனிய மொழியென்று பறையறை தமிழா
இனிய பன்னூல்கள் தந்தது நற்றமிழே
இதய சுத்தியுடன் தமிழிற்குழைத்திடு தமிழா!


ஈகை உளம்கொண்ட திருக்குறளும் நாலடியும்
இதமான தொல்காப்பியமும் தருமே பெருமை
ஈசல்கள்போல் நற்றமிழின் வாசமதைத்தமிழா
இத்தரையில் நீயுயர்த்திப் பாடிட எழுந்திடு!


சிலம்பும் மணியும் இனிய நறும்பாடல்களும்
சீறாவும் தேம்பாவணி எல்லாள காவியமும்
சிறந்தே எழுந்தது நம்தமிழில் - உளம்கொண்டு
எண்ணித் தமிழா எங்கும் எழுக.

(80 சொற்கள்)

-
கலைமகன் பைரூஸ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக