'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.
நான் கற்பவற்றை, கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து, தமிழுக்குத் தீன போட நினைக்கிறேன். எனவே, எனது தளத்துடன் தொடர்ந்து பயணியுங்கள். எனது இற்றைப்படுத்தல்கள் உங்களை உடனுக்குடன் வந்தடைய விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இணைத்துவிடுங்கள்.
உங்களது ஆக்கங்களையும் 'கலைமகன் கவிதைகள்' (ismailmfairooz@gmail.com) வலைத்தளத்திற்கு அனுப்பி வைக்கவும்.
உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிக்க விரும்பினால் ismailmfairooz@gmail.com எனும் மேலுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்..
'வெல்லத் தமிழினி வெல்லும்'
-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
-----------------------------------------------------------------------------
இந்த கேள்வியை இரண்டாக பிரிக்கலாம்.
- தமிழ் என்றால் என்ன?
- வளர்ச்சி என்றால் என்ன?
தமிழ் என்றால் என்ன?
தமிழ் என்பது ஒரு மொழி, அது அதன் அடித்தளமான தொல்காப்பிய சூத்திரத்தின் வழி இயங்கும். அது தமிழ் மொழியின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு விதி, மறுவுதல், திரிதல் உட்பட அனைத்தையும் பேசுகிறது. அதாவது தமிழ் மொழி எப்படி இயங்கவேண்டும் என்றும், மேலும் என்னவெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகும் என்றும் அறிந்து அவைகளுக்கான வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. இதன் விதிகளுக்கு உட்படாதது தமிழ் என்று கருத முடியாது.
வளர்ச்சி என்றால் என்ன?
அடித்தளம் உறுதியாகவும், அதன் மேலே கூடுதலாக அதே பண்புடைய பகுதி புதிதாக சேர்வதும் வளர்ச்சி ஆகும். அடித்தளம் அரித்துக்கொண்டிருக்க அதன் மேல் புதிதாக சேரும் பகுதி அதற்கு மேலும் பாரத்தைத்தான் கொடுக்கும், அதை அழிவுக்கு இட்டுச்செல்லும். தமிழின் பழைமை வாழவேண்டும் அதிலிருந்து புதுமை வளரவேண்டும். புதுமை மெருகேற்றப் பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பழமைக்கு முரண்படக் கூடியதாக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அது தமிழாகாது வேறொன்றாகிப்போகும்.
நீங்கள் தமிழுக்கு ஏதாவது செய்து உள்ளீர்களா?
தொல்காப்பியம் மக்களிடம் சென்று சேர்வது, மக்கள் அதை கற்பது, அதன் வழி தனது மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்வது, புதிய கண்டுபிடிப்புகளுக்கான பெயர்களை தமிழ் மொழி விதியின் அடிப்படையில் அமைத்து கொள்வது. ஏற்கனவே சேர்ந்த இதுபோன்ற தொல்காப்பிய விதிகளுக்கு முரணான சொற்களை அடையாளம் கண்டு அதை செயல்பாட்டிலிருந்து நீக்குவது.
இவைகளை தனி மனிதன் செய்ய இயலாது. இதற்கான திட்டங்களை வகுத்து குறைந்தது ஒரு சில பத்தாண்டு ஒவ்வொரு துறையை சார்ந்த ஒவ்வொருவரும் உழைத்தால் தமிழின் அடித்தளத்தை மீட்டுருவாக்கம் செய்ய இயலும். ஆனால் இதன் தேவையை அரசும் மக்களும் உணர்வது எப்படி?
செய்யப்படவேண்டிய சில சேவைகள்!
- அறநூல்களுக்கு பொழிப்புரையும் ஆய்வும் செய்வது போல தமிழையும் தமிழர் சமயத்தையும் அறிந்த ஆய்வாளர்கள் அதற்கு பொழிப்புரை எழுதவேண்டும். சமய நூல்களும், சித்த வைத்திய நூல்களும் முற்றிலும் தமிழ் ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டது போல தெரிகிறது. உதாரணமாக திருமந்திரத்துக்கு மதப்பெரியார்கள்தான் பொழிப்புரை எழுதி உள்ளார்களே தவிர தமிழ் அறிஞர்கள் எழுதவில்லை, எனவே தமிழ் சொற்களுக்கு குழப்பமான பொருள் கொடுத்து தமிழர் மறைநூல்களின் பொருளை குழப்பத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
- முதல் நூல் மற்றும் வழிநூல் எவையெவை என்று ஆய்வுகள் மூலம் தெளிவு படுத்தப்படவேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஏறக்குறைய அனைத்துமே வழிநூல் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பிழை. பொய் நூல்களும் உண்டு என்பதால், அவைகள் முறையாக ஆராய்ந்து தக்க காரணங்களுடன் வகைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக கிபி 1200 இல் எழுதப்பட்ட நன்னூல் வழிநூலாக வகைப் படுத்தப்பட்டு உள்ளது. வழிநூல் என்பது முதல் நூல் இலக்கணத்துக்கு முரண்படக் கூடாது என்பதால் முனைவன் ஒருவன் தனது அனுபவத்தின் வாயிலாக எழுதப்படும் நூல் வழிநூல் ஆகாது. ஆனால் நன்னூல் எழுதிய பணவந்து முனிவர் தொல்காப்பியத்தை கற்று அதோடு சேர்த்து சில பகுதிகளை இணைத்து எழுதிய நன்னூல் எவ்வாறு வழிநூல் ஆகும்?
- ஆங்கிலத்தில் oxford அகராதி போல எல்லோருக்கும் சென்றடையும் விதத்தில் முழுத்தரவுகளை கொண்ட தமிழ் அகராதி ஒன்று இணையத்தில் ஏற்படுத்தப் படவேண்டும். உதாரணமாக அத அவராத்தியில் ஒரு சொல்லுக்கு கீழ்கண்ட தரவுகள் இடம்பெறலாம்.
- தமிழ் ஆய்வுகளின் செய்திகள் மக்களுக்கு புரியும் படி படமாக செய்து வெளியிடப்படவேண்டும். இதில் நூல்களின் காலங்கள், புலவர்களின் காலங்கள், தமிழோடு மற்ற மொழிகளின் வயது, அரசுகளின் காலங்கள், அரசர்களின் காலங்கள் உட்பட அனைத்தும் காலக்கோடாக தயார் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வெளிப்படவேண்டும். தமிழ் ஆய்வு மாணவர்கள் இதற்க்கு பயன்படுத்தப்படவேண்டும். உதாரணாமாக,
- இதைவிட சிறப்பாக கவரும் விதத்தில் எளிமையாக விளங்கும் விதத்தில் உருவாக்க நவீன தொழில்நுட்பங்கள் உதவுகிறது. உதாரணமாக ,
- அதி நவீன தொழில் நுட்பத்தையும் தமிழையும் பிரித்து வைத்து இருப்பது போல உணரமுடிகிறது. அதை களைய வேண்டும். புதிய தொழில் நுட்பமும், ஆப்ஸ் வைத்துள்ள நிறுவனங்களை தமிழக அரசின் சார்பில் தொடர்பு கொண்டு தமிழை அதில் சேர்க்க வலியுறுத்தலாம்.
- பொது மக்களுக்கு இது தொடர்பாக போட்டிகள் நிகழ்த்தப்படவேண்டும், பரிசுகள் பெரிதாக வழங்கபபடவேண்டும். அதற்கு முன்பு போட்டி தொடர்பான இலவச பயிற்சி வழங்கப் படவேண்டும்.
- பல்வேறு தமிழ் ஆய்வாளர்களை நாம் சரியாக பயப்படுத்தாமல் இருக்கிறோம். அவர்களை மாநில அரசு விருப்பு வெறுப்பு இன்றி அடையாளம் கண்டு அவர்களுக்கு உள்ள யோசனைகளை அவர்களே முன்னெடுக்கும் விதத்தில் வாய்ப்பளிக்க வேண்டும், நிதி அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு வடக்கன் தரவில்லை என்பதை விட நமது அரசு போடும்போக்காக உள்ளது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
- தமிழ் நூல்களில் உள்ள இடைச்சொருகளை கண்டறிந்து அவைகளை களைந்து அந்தந்த நூல்களை வெளியிடப்படவெண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக