'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம்
நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம்
கொண்டாடப்படவுள்ளது.
அந்நந்நாளை முன்னிட்டு, எனது (http://kalaimahanfairooz.blogspot.com/)
வலைத்தளத்தில் தமிழ்மொழி சார் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகளை,
கவிதைகளை (மரபு மற்றும் வரவுக்கவிதைகள்), ஏனைய கட்டுரைகளை இற்றைப்படுத்துவதற்கு
விரும்பியுள்ளேன்.
திங்களொன்று அப்படியே இருப்பதால், தயைகூர்ந்து
உங்களது ஆக்கங்களை எனது ( kalaimahanfairooz@gmail.com ) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். அவை காலத்தில்
உங்களையும், நம்மன்னை தமிழையும் ஏந்தி நிற்கும் என்பதில் கிஞ்சித்தும்
சந்தேகமில்லை.
அன்னைத் தமிழை என்றும் ஏத்துவோம்.----------------------------
உலக #தாய்மொழித் தினம் | பன்னாட்டுத் தாய்மொழித் தினம் | #International #Language Day | #கட்டுரைகள் | கவிதைகள் | ஆய்வுக்கட்டுரைகள்
----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக