பெயரெச்சம் காலம் காட்டும்.
உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,
வாங்கிய பதக்கம்.
இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.
பெயரடை காலம் காட்டாது.
அது ஒரு பெயர்ச் சொல் எப்படிப் பட்டது அல்லது எவ்வாறு இருக்கின்றன என விவரிக்கும்.
உதாரணம்: அழகான தோட்டம். கருமையான முகில். பச்சைச் சட்டை. உயர்ந்த கட்டிடம்.
இவ்வாறு அழகான, கருமையான, பச்சை, உயர்ந்த என வந்துள்ள சொற்கள் அனைத்தும் காலம் காட்டாமல் பெயர்ச் சொற்களை விவரிக்கின்றன.
பெயரடைகள் தனிப்பெயரடை, கூட்டுப் பெயரடை என வகைப்படுத்தப்படும்.
கூட்டுப் பெயரடை 'ஆன' விகுதி பெற்று வரும்.
உதாரணம் -
* கருமை +ஆன = கருமையான
* கருமையான முடி.
வினையெச்சம் காலம் காட்டும்.
உதாரணம்: படித்து முடித்தான். வந்து உண்டான், எடுத்துக் கொடுப்பான். இவற்றுள் படித்து, வந்து, எடுத்து என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.
வினையடை காலம் காட்டாது.
அது வினைச்சொல் எப்படிப் பட்டது அல்லது எவ்வாறு இருக்கின்றன என விவரிக்கும்.
ஆக ,ஆய் ஆகிய விகுதிகளை பெற்று வருமாயின் அவை கூட்டு வினையடை எனப்படும்.
உதாரணம்: விரைவாக ஓடினான், கடுமையாகப் பேசினார், அன்பாகப் பழகினார், கவனமாக ஓட்டினான். இங்கு விரைவாக, கடுமையாக, அன்பாக, கவனமாக என வந்துள்ள சொற்கள் அனைத்தும் காலம் காட்டாமல் (வினைச்சொல்லை விவரித்து) வந்துள்ளன.
பெரும்பாலும் ‘ஆக’ , 'ஆ்ய்' எனும் உருபுகளை ஏற்று வரும்.
உதாரணம்-
* வேகமாய் வந்தான்
* வேகமாக வந்தான்.
தனி வினையடை, கூட்டு வினையடை வினையடைகள் வகைப்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக