It கலைமகன் கவிதைகள்: கலைக் குரல்

சனி, 4 ஆகஸ்ட், 2012

கலைக் குரல்

அன்பான வேண்டுகோள்
அன்புடனே வந்தார் பலர்க்கும்!
---------------------------------------------------
அரவணைத்தே கொடுக்கும் நீங்களெலாம்
என்தமிழில் யானியற்றும் இப்பாக்கள்கண்டு
இரவல னாம் தாய்த்தமிழில் இவனெனக்கண்டு
இதயத்தொடு ஒட்டிக் காதல்செய்வீரெனை!

நான்நயந்த நற்றமிழில் வள்ளுவன்குறள்போல்
நானிலமெங்ஙனும் காணேன் தீம்பால்
துன்பந்தான் குறள்வெண்பாவாய் வாராமையால்
தாய்த்தமிழில் என்பாணியில் இயற்றியபாவாமீது!

நாளும் பொழுதும் காட்சியாய் என்முன்னேவரும்
நெஞ்சை வாட்டும் செய்கைகள் பாவாய்
காலந்தாழ்த்தாதே எனக்கேயுரித்தாய தமிழில்
காலமெலாம் யான்தருவேன்! சுவைப்பீரே!

தளைதட்டுதல் கண்டு வெண்பாவா எனநோக்கா
தருகின்றதா ஈதில் நலமாம் கருத்து எனநோக்கி
இளையான் என்னில் சேர்க்க அன்பினையும்
இங்கிதமாய்த் தருவேன் இன்னும் பாநான்!
-------------------------------------------------------------------
அவை....













0016
சினத்தைக் கைக்கொண்டா னாயின் ஒருவன்
தன்னைக் கொன்றான் ஆங்கு

0015
சிற்றுடல்க்கு ஏங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

0014
அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

0013
சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

0012
போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

0011
ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி


0010

அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை - பயனில
நட்டார்கண் ஒட்டுதலோ திரு


0009
வேண்டுக வேண்டின் நல்லன்பு - வேண்டில்
வேண்டாமை நன்று மற்றும்பிற


0008
மறைத்தலின் மாண்புணராதார் - நீலிக்
கண்ணீ ருகுத்தலி லேதுபயன்?

0007
குறைபாடு இலா ஆதி முதலோனின்
நிறையைப்பாடு இல்லை துன்பமே!

0006
இல்லை யில்லையென்று இல்வருவான்க்கு
இல்லையென்றாயின் நீயுமிலையே!

0005
உண்ணல் பருக லற்றும் - காதலர்
விண்புகழ் பண்பொடு வாழ்தலுயர்வு!

0004
அறிவுடைமை எ.ஃதெனின் காதலர் - ஈற்றில்
செறிந்த வுயிராய் ஒட்டியிருத்தல்!

0003
சின்னஞ் சிறாரின் இன்னல் கண்டவர்
துன்பம் துடைப்ப தழகு!

0002
என்பின் வலியொடு துயருறும் - பாலர்
பணிக்கண் அமர்த்துதல் தீது!

0001
செய்தொழில் ஊக்கம் கண்டுழியும் - அவர்தம்
ஊதியம் கொடுக்காமை இழுக்கு!

-----கருத்துரைகள்----

Pirainila Krish 
திருக்குறளை அவமதித்தல் எனும் கருத்து வாசிப்போன் மனதில் தோன்றாமல் இருந்தால் வெற்றி அண்ணா.. வாழ்த்துக்கள் உங்கள் பயணத்திற்கு...
Begum Sbegum
நல்ல முயற்சி... தொடருங்கள்....
யாழினி முனுசாமி 
அருமையாக இருக்கின்றன..
Shanthini Rasathy
ஆகா ..மனம் நிறைந்ததை விட ..கண் நிறைந்தது உங்கள் கவி படித்து. பேரழகு.  கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை ..ஆனால் ..வாசிக்கும்போது சந்தோசமாக உள்ளது ..உங்கள் கவிப்பார்வை வீரம் மிக்கது....பல சாதனைகளை நீங்கள் அடைய வேண்டும்.
தீயவைகளை தீயிட்டுக்கொழுத்தும் நீங்களிட்ட பாவனைத்தும்... திருந்துவோரே இப்பூமியில் இனியிருக்கத்தகுதிபெற்றவர்.
Rajakavi Rahil
    இன்று இலக்கணம் கடந்த இலக்கியங்கள்தான் பேசப்படுகின்றன .
    தமிழ் வளர்வதற்கு இலக்கணம் மீறாத இலக்கியம் அவசியம் .
    தமிழ் வளர்ந்த பின் அந்தத் தமிழ் வேறு சிகரம் தொட ,வேறு கிரகம் செல்ல
    இலக்கணம் மீறிய அழகும் பொருளும் மிக அவசியம் .
    மக்களுக்கான இலக்கியங்களில் இலக்கணம் பெரிது படுத்தப் படுவதில்லை .
    நானும் 1500 குறள்கள் எழுதி இருக்கிறேன் 100 அதிகாரங்களில்.
    உங்கள் முயற்சியை தொடருங்கள் !Kanapathippillai Thevasooriyacumar
VERY NICE,I LIKE IT!!!!......
Kannady Mano:
உங்கள் தமிழ் மிக சுத்தமானதாகவும் தன்னடக்கமாகவும் உள்ளது. உங்கள் பெருமையை குறிக்கின்றது
நல்ல எழுத்தாளன் தன்னைப்பற்றி புகழமாட்டான் அவன் அடி மனதில் இருக்கும் வேதனைகளையும் சகிக்க முடியாத மனித துன்பங்களையுமே எழுதி மகிழ்வான். அவ்வண்ணம் தாங்கள் உள்ளீர்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக